சுவிட்சர்லாந்து ஜனாதிபதி பயோலா வயோலா ஹம்ஹார்ட் மொங்கோலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி ஒருவர் மொங்கோலியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
மொங்கோலியாவின் ஜனாதிபதி Ukhnaagiin Khurelsukh வை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளினதும் தலைவர்கள் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் சுவிஸ் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மொங்கோலியாவில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து உதவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.