சுவிட்சர்லாந்து விமானத்தின் முன்பக்க கண்ணாடி வெடித்த காரணத்தினால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சூரிச்சிலிருந்து கோதென்பர்க் நோக்கிப் பயணம் செய்த விமானம் இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் முன்பக்கக் கண்ணாடி வெடித்த காரணத்தினால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புக் காரணமாக குறித்த விமானம் ஹானோவரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கொக்பிட்டின் முன்பக்கக் கண்ணாடி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானிகள் பாதுகாப்பான முறையில் தம்மை தரையிறக்கியமைக்காக பயணிகள் நன்றி பாராட்டியுள்ளனர்.
இந்த விமானத்தில் 123 பயணிகளும் ஐந்து விமானப் பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
எதனால் இவ்வாறு கண்ணாடி வெடித்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.