லெபனானின் தென்பகுதி மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
லெபனானின் பெலிய்டா பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
யுத்த விமானங்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்க்பபட்டுள்ளது.
இதேவேளை, மேற்குகரைப் பகுதியின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொண்டு நிறுவனமொன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதனால் பிரதேசத்தின் இயல்பு நிலைமை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.