இத்தாலியின் மிலான் நகரில் இடம் பெற்ற வாகன விபத்தில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் மற்றுமொரு பாதசாரி படுகாயம் அடைந்துள்ளதாகவும் மேலும் இரண்டு பெண்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகன விபத்துடன் தொடர்புடைய சாரதி, மது போதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
55 வயதான குறித்த சாரதி மது அருந்தி இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வேண்டுமென்றே வாகனத்தை பாதசாரிகள் மீது செலுத்தினாரா என்ற அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் இத்தாலிய போலீசார் விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒரு ஜெர்மனிய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.