ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான பயணங்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை அறிவித்தல் விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளி விவகார அமைச்சினால் இந்த பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹமாஸ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தலைவர்கள் மீதான தாக்குதல்களுக்கு பலி தீர்க்கப் போவதாக ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே குறித்த நாடுகளுக்கான பயணங்கள் ஆபத்தானவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் அவசர தேவை அல்லாதவர்கள் இஸ்ரேலுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.