சுவிட்சர்லாந்தின் கிழக்கு பகுதியான எல்பிஸ்டின் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மலை ஏறி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29 வயதான மலையேறி ஒருவரே இவ்வாறு மலை ஏறிக்கொண்டிருந்த போது சறுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும் குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் ஒரு ஜெர்மன் பிரஜை எனவும் சான்டிஸ்ட் பகுதியில் வசித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்தந பர் தனியாக மலை ஏறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.