ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு காணப்படும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வு அறிக்கை பெற்றுக்கொள்ப்பட உள்ளது.
பாதுகாப்பு வழங்கப்படும் முன்னதாக இவ்வாறு அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் காணப்படும் உயிர் அச்சுறுத்தல்களின் தனித் தனியாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.