சுற்றுலாப் பயணிகளுக்கான வீசா வழங்குதல் குறித்து இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இன்றைய தினம் இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஈவீசா வழங்கும் செயன்முறை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த நடவடிக்கையை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கை வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் விமான நிலையத்தில் ஒன் அரைவில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளார்.