சுவிட்சர்லாந்தில் தொடர் மாடி குடியிருப்புகளின் விலைகள் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் இவ்வாறு தொடர்மாடி குடியிருப்புகளின் விலைகளில் அதிகரிப்பு அதிக பதிவாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் தொடர் மாடி குடியிருப்புகளின் விலைகள் நான்கு வீதத்தினால் அதிகரித்துள்ளது.
சூரிச்சை மையமாகக் கொண்டு இயங்கி வரும் வீட்டுமனை ஆலோசனை நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எவ்வாறு எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தில் தொடர் மாடி குடியிருப்புகளின் விலைகளில் குறைவு பதிவாகியுள்ளது.
இதேவேளை, சுவிட்சர்லாந்தில் காரியாலங்களின் விலைகளில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.