சுவிட்சர்லாந்தில் 79 வயதான பெண் ஒருவரின் உயிர், மெழுகுதிரிகளினால் காவு கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டில் எரிந்த மெழுகுதிரிகளினால் ஏற்பட்ட தீ விபத்தினால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சிச்விஸ் கான்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மெழுதிதிரியினால் ஏற்பட்ட விபத்து என்பது தெரியவந்துள்ளது.
இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரு வீட்டில் இருந்த மூன்று பேரைக் கொண்ட குடும்பம் பாதுகாப்பாக வெளியேறியுள்ளது.
எனினும், அண்டை வீட்டில் இருந்த 79 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.