பங்களாதேஷின் டாக்கா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் கலவரங்கள் காரணமாக இவ்வாறு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
மாணவர் அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாக பிரதமர் சேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் டாக்கா விமான நிலையத்தினை ஆறு மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடுவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் பங்களாதேஷின் பிரதமராக பதவி வகித்த சேக் ஹசீனா, இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிற்கு சென்ற சேக் ஹசீனா, பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.