சுவிட்சர்லாந்தில் இருந்து இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கான இடைநிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது.
சூரிச் மற்றும் தெல் அவீவ் நகரங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு வந்த விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விமான பயண இடைநிறுத்தம் எதிர்வரும் 12 ஆம் தேதி வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்ற நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் வரையில் விமான பயணங்கள் மேற்கொள்வது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
விமான பயண இடைநிறுத்தம் மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லெபனானுக்கான விமான பயணங்களையும் சுற்றுலா வந்து இடைநிறுத்தி உள்ளது.
சுவிட்சர்லாந்து மட்டுமன்றி ஐரோப்பாவின் பல நாடுகள் இவ்வாறு விமான பயணங்களை இடை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.