சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணம் செய்த வயோதிபர் ஒருவர் சக பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இந்த குற்றச் செயலுக்காக குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு 900 சுவிஸ் பிராங்குகள் அபராதமும், வழக்கு விசாரணைகளுக்கான கட்டணமாக 2177 பிராங்குகளையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் தாம் ஓரினச் சேர்க்கையாளர் எனக்கூறி இளைஞரை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் அவ்வாறு செய்வதனை நிறுத்துமாறு கூறியும் தொடர்ச்சியாக அவர் துன்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
பாலியல் தொல்லையை தொடர்ந்து குறித்த இளைஞர் வேறு ஒரு ஆசனத்தில் சென்று அமர்ந்ததாகவும் குறித்த வயோதிபர் அந்த இடத்திலும் சென்று தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.