சுவிட்சர்லாந்தில் ரயிலில் டிக்கட் இன்றி பயணம் செய்த நபர் ஒருவருக்கு 13000 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேர்னைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 50 சந்தர்ப்பங்களில் குறித்த நபர் டிக்கட் இன்றி ரயிலில் பயணித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி ஜெனீவாவிலிருந்து சூரிச் பயணம் செய்த ரயிலில் டிக்கட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த 67 வயதான பேர்னைச் சேர்ந்த நபரிடம் டிக்கட் இருக்கவில்லை எனவும், விசாரணையின் போது 50 தடவைகள் இந்த ஆண்டில் டிக்கட் இன்றி பயணித்தமை தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த நபருக்கு 13000 சுவிஸ் பிராங்குகள் அபராதமாக விதித்துள்ளது.