சுவிட்சர்லாந்து உள்துறைத் திணைக்களம் கணிப்பீடுகளில் பாரியளவு தவறிழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குதல் தொடர்பிலான கணிப்பீடுகளில் பாரியளவு தவறிழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்துறை திணைக்களத்தினால் மேற்கொண்ட கணிப்பீட்டை விடவும் ஓய்வூதியக் கொடுப்பனவுத் தொகை 4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கணிப்பீடுகளில் இழைக்கப்படும் தவறுகள் பல தடவைகைள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் போதும் வாக்கெடுப்பு குறித்த கணக்கெடுப்பில் தவறிழைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்சிகளின் வாக்குகள் தொடர்பிலான கணிப்பீட்டிலும் தவறிழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.