பங்களாதேஷ் பயணங்கள் குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் பதற்ற நிலையை உன்னிப்பாக அவதானிப்பதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் பிரதமர் சேக் ஹசீனா பதவி விலகியுள்ளார்.
மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
பங்களாதேஷ் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்பதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சிறுபான்மை சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.