சுவிட்சர்லாந்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயண இடைநிறுத்தம் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி வரையில் இந்த பயண இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், லெபனான், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கான விமானப் பரப்பில் சுவிஸ் விமானங்கள் பறக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்காக வருந்துவதாக சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கும் என அறிவித்துள்ளது.