சுவிட்சர்லாந்தின் வோட் கான்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வோட் கான்டனின் அவென்சஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இவ்வாறு 51 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ஒர் ஜெர்மனிய பிரஜை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 39 வயதான ஜெர்மனிய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ட்ரக் வண்டியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.