காசாவில் பாடசாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலைகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து சிலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 என மற்றுமொரு சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் எந்தவொரு இடமும் பாதுகாப்பானதல்ல என்பதை வெளிக்காட்டும் நோக்கில் இஸ்ரேல் படையினர் இவ்வாறு அனைத்து இடங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.