சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு முதல் அரையாண்டு பகுதியில் குடியேறிகளின் வரிசையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் 80684 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக குடியேறியுள்ளனர்.
மத்திய குடியேற்ற செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுடனும் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் குடியேறியோர் எண்ணிக்கை சுமார் ஆறு வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உறுப்பு நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்தில் குடியேறியோர் எண்ணிக்கை சுமார் 7.2 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.