இலங்கையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 11 வேட்பாளர்களும், வேறும் அரசியல் கட்சி ஒன்றின் சார்பிலும், 10 சுயாதீன வேட்பாளர்களும் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ச, னுவான் போபகே உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.