பிரித்தானியாவில் இனவெறி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் கலவரங்களுக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏதிலி கோரிக்கையாளர்கள், குடியேறிகள் மற்றும் அதற்கு ஆதரவான தரப்புக்களை இலக்கு வைத்து பிரித்தானியாவின் பல இடங்களில் வன்முறை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏதிலிகள் தங்குமிடங்கள், குடியேறிகளின் முகாம்கள், குடியேறிகளின் சட்டத்தரணிகளது வீடுகள், காரியாலங்கள் என்பன மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான ஓர் பின்னணியில் இனவெறி அடிப்படையில் செயற்படுவோரை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
பிரித்தானியாவின் பல முக்கிய வீதிகளில் இனவெறியை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீசா காரியாலங்கள், குடிவரவு சட்டத்தரணி அலுவலகங்கள் உள்ளிட்ட 100 இடங்களில் போராட்டங்களை நடத்துமாறு வலதுசாரி இனவெறி அமைப்புக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக கோரியிருந்தன.
எனினும், ஏதிலிகள், குடியேறிகளை பாதுகாக்கும் நோக்கல் பல நகரங்களிலும் ஆயிரக் கணக்கானவர்கள் குழுமி தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.