இலங்கை அமைச்சரவையின் முக்கிய இரண்டு அமைச்சர்கள் பதவியை இழந்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாரின் பெர்னாண்டோ ஆகியோர் அமைச்சுப் பதவிகளை இழந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இந்த இருவரும் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து கட்சியை விட்டு வெளியேறி இருந்தனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்திருந்தது.
இந்த கட்சியின் தீர்மானம் சரியானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் தங்களது பதவிகளை இழக்க நேரிட்டுள்ளது.