இஸ்ரேலிய நிதி அமைச்சர் Bezalel Smotrich வெளியிட்ட கருத்துக்கு சுவிட்சர்லாந்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
காசா நிலப்பரப்பில் மக்கள் பட்டினியில் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில் இஸ்ரேல் நிதி அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் பிரித்தானியா, உள்ளிட்ட நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் நிதி அமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து செயல்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.
சுவிஸ் வெளிவிவகார திணைக்களம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளது.
இது தொடர்பில் ட்விட்டரில் பதிவொன்றும் இடப்பட்டுள்ளது.