எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் இஸ்ரேலுக்கான விமான பயணங்களை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாத இறுதிவரையில் இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் நிலவிவரும் பதற்ற நிலைமைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பதற்ற நிலைமை காரணமாக ஏற்கனவே விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் போன்றே மேலும் பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான பயணங்களை இடைநிறுத்திக் கொண்டுள்ளன.
பிராந்திய வளையம் முழுவதும் நிலவிவரும் பதற்ற நிலைமைகள் காரணமாக இவ்வாறு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.