காசாவில் ஒன்பது பாடசாலைகள் மீது இஸ்ரவேலிய படையினர் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த எட்டு தினங்களில் இந்த குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவின் முன்னணி மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
போர் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த உயிர் சேத எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாக இஸ்ரேலிய படையினர் காசா பாடசாலைகள் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்தி உள்ளனர் பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகளில் பலஸ்தீன மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.