சுவிட்சர்லாந்தில் மனைவியை படுகொலை செய்த கணவர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயதான நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண் மன நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் தானகவே உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தண்டனை விதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
தாம் இந்த படுகொலைச் சம்பவத்தை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் உறங்கிக் கொண்டிருந்த போது கழுத்து நெரித்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகளில் பெண்ணின் கணவர் கொலை செய்தமையை நிரூபிக்க போதியளவு சாட்சியங்கள் காணப்படுவதாகவும் இதனால் தண்டனை விதிப்பதாகவும் பேர்ன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.