போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் குறித்த இறுதி யோசனையை ஏற்றுக்கொள்ளுமாறு மத்தியஸ்தம் வகிக்கும் தரப்புக்கள் கோரியுள்ளன.
இஸ்ரேலின் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் நிலவி வரும் பின்னணியில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளன.
போர் நிறுத்தம் மற்றும் பயணக் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் எகிப்தின் கெய்ரோ அல்லது கட்டாரின் டோஹாவில் சமாதான பேச்சுவார்த்தைகளை தொடருமாறு மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகள் இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்திடம் கோரியுள்ளன.
இதேவேளை, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு போர் தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.