நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை தடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் இனவெறி அடிப்படையில் போராட்டங்கள் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடியேறிகள் மற்றும் ஏதிலிகளை இலக்கு வைத்து வெள்ளையின கடும்போக்காளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.
குடியேறிகளின் சொத்துக்களை வலதுசாரி கடும்போக்குவாதிகள் தாக்கி அழித்து வருகின்றனர்.
இதேவேளை இனவெறி தாக்குதல்களை கண்டித்தும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவி வரும் பதற்ற நிலையை தணிக்கும் நோக்கில் பிரதமர் அவசர கூட்டமொன்றை நடத்தியுள்ளார்.
இதன் போது பொலிஸார் ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கூடுதல் எண்ணிக்கையில் கலகத்தடுப்பு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் பொலிஸாரை சரியான இடங்களில் கடமையில் அமர்த்தல் போன்றவற்றினால் வன்முறைகளை கட்டுப்படுத்த முடிந்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வன்முறைகளில் தாக்கி அழிக்கப்பட்ட சொத்துக்களை புனரமைக்கும் நோக்கில் 400,000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் திரட்டப்பட்டுள்ளன.