காசாவில் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் 90 பலஸ்தீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அல்தாபியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் 90 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஹமாஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதனை தவிர்க்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னர் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.
புலனாய்வு தகவல்களை திரட்டி பொது மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுவதை தவிர்த்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறு எனினும் தாக்குதலில் பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களாக இஸ்ரேலிய படையினர் காசா பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலான பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக இதுவரையில் சுமார் 40,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 90000பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல்கள் காரணமாக சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.