காசாவில் பாடசாலைகள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அதில் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த தாக்குதல்களை ஈரான், கட்டார், எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, லெபனான், துருக்கி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அமைப்பு என்ற பல தரப்புக்கள் கண்டித்துள்ளன.
இஸ்ரேலிய படையினர் பலஸ்தீன மக்களை கூட்டுப் படுகொலை செய்துள்ளதாக ஹமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேலிய படையினர் பலஸ்தீன மக்களை இனவழிப்புச் செய்வதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிராயுதபாணியான பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களை கண்டிப்பதாக கட்டார் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் நிராயுதபாணிகளாக பலஸ்தீன மக்களை படுகொலை செய்வதாக எகிப்து குற்றம் சுமத்தியுள்ளது.