சுவிட்சர்லாந்தின் லூசார்ன் கன்டனில் பாரிய அளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
லுசார்ன் நகரம் அமைந்துள்ள அனேக பகுதிகளில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் மின் தூக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மின்தடை சீக்கிரம் சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.