சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரிக்கினோ, லேக் ஜெனீவா மற்றும் வலாயிஸ் பகுதிகளில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய தினம், ரிக்கினோவின் பியஸ்காவில் 35.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினமும் வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதிகளவு வெப்பநிலை நீடிப்பு தொடர்பில் மத்திய அரசாங்கம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதேவேளை, லேக் ஜெனீவா மற்றும் வலாயிஸ் கான்டன்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.