பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அண்மைய நாட்களாக பிரித்தானியாவில் நிறவெறி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களது பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் நம்பகமான செய்திகள் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை மட்டும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களின் நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் சுமார் 750,000 இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுமாறும், ஏதேனும் அவசர தேவைகளில் உடன் தொடர்பு கொள்ளுமாறும் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதெனும் அவசர நிலைமைகளின் போது 44 7475206220 அல்லது 020 7262 1841 என்ற இலக்கங்களுடன் அல்லது mail@slhc-london.co.uk என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.