பிரேஸிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரேஸிலின் சாவோ பவ்லோ மாநிலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாரானாவிலிருந்து குருலொஸ் நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ATR 72-500 என்ற இந்த விமானத்தில் 57 பயணிகளும் நான்கு விமானப் பயணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு பிரேஸில் பிரதமர் லுலா டா சில்வா ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.
மக்கள் செறிந்து வாழும் பகுதியொன்றில் இந்த விமானம் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், தரையில் இருந்த எவருக்கும் இந்த விபத்தினால் உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2010ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.