இந்தியாவின் மூன்று செல்வந்தர்களின் சொத்து சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முக்கியமான மூன்று செல்வந்தர்கள் மற்றும் அவரது அவர்களது குடும்பத்தினர்களது மொத்த சொத்து மதிப்பானது சிங்கப்பூர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெரறுமதி 460 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அம்பானி குடும்பத்தினர், பஜாஜ் குடும்பத்தினர் மற்றும் பிர்லா குடும்பத்தினர் ஆகியோரது மொத்த சொத்துக்கள் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரானது தெரிவிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் இந்தியாவின் முக்கியமான செல்வந்தர்களான அதானி உள்ளிட்டவர்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து பெறுமதி 309 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிராஜ் பஜாஜ் உள்ளிட்ட பஜாஜ் குடும்பத்தினரின் மொத்த சொத்து பெறுமதி 7.1 லட்சம் கோடி இந்திய ரூபாய் எனவும், குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட பிர்லா குடும்பத்தின் மொத்த சொத்துக்கள் 5.4 லட்சம் கோடி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் வியாபார குடும்பங்களின் மொத்த சொத்துப் பெறுமதி 1.3 ட்ரில்லியன் டாலர்கள் எனவும் இது சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெறுமதிகளை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்ட சொத்துக்களை உடைய 124 குடும்பங்களிடம் இந்தளவு பாரிய தொகை சொத்துக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.