காசாவில் பாடசாலைகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீண்டும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் காசா பிராந்திய வலய பாடசாலைகள் மீது வான் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போர் காரணமாக இடம்பெயர்ந்த பலஸ்தீன மக்கள் பாடசாலைகள் தங்கியுள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மக்கள் மீது வான் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மீதான தாக்குதல்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பொதுமக்களையும் பொதுமக்களின் உட்கட்டுமான வசதிகளையும் பாதுகாக்கும் வகையில் போர் முன்னெடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.