இஸ்ரேலிய அரசாங்கம் இனவழிப்பு நோக்கில் தாக்குதல் நடத்தி வருவதாக மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காசாவில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இனவழிப்பு நோக்கில் பலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மருத்துவரான பஸ்கல் அன்ட்றூ என்ற மருத்துவர் இது தொடர்பாக குற்றம் சுமத்தியுள்ளார்.
களத்தில் பணியாற்றும் போது இந்த தாக்குதல்களின் தீவிரத் தன்மை குறித்து அறிந்து கொண்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
குறித்த மருத்துவர் கான் யூனிஸ் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அதிக அளவில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படையினர் பள்ளிவாசல்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், மருத்துவ பணியாளர்கள் தங்குமிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற பல்வேறு இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.