சுவிட்சர்லாந்தின் சூரிச் மிருகக்காட்சி சாலையில் இலங்கை யானை ஒன்று கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.
49 வயதான யானை ஒன்றே இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த யானை ஒன்று இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்லா ஹிமாலி என்ற யானையே இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யானையினால் சுயமாக எழுந்து நிற்க முடியாது என மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு ஹிமாலி என்ற யானை எதிர்நோக்கி வந்த அசௌகரியங்களை கருத்தில் கொண்ட அதிகாரிகள் குறித்த யானையை கருணை கொலை செய்தனர்.
இந்த யானை இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் யானைகள் சரணாலயம் ஒன்றிலிருந்து இந்த யானை கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வயது இருக்கும் போது இந்த யானை கொண்டு வரப்பட்டதாக மிருகக் காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த யானை இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த யானை ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வயது மூப்பு காரணமாக குறித்த யானை பல்வேறு உபாதைகளை எதிர் நோக்கியதாகவும் குறிப்பாக சிறுநீரகங்கள் செயல்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.