சுவிட்சர்லாந்தில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் குடிபோதையில் வாகனம் செலுத்தி போது விபத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் சென் கேலன் கான்டனின் பொலிஸ் பிரதானியே குடிபோதையில் வாகன விபத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக குறித்த போலீஸ் பிரதான சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென் கலன் வார்டோவா நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தை வேகமாக செலுத்தியதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ்அதிகாரி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது குடிபோதையில் இருந்தமை தெரிய வந்துள்ளது.
குற்றவியல் அடிப்படையிலும் நிறுவன ஒழுக்காற்று ரீதியாகவும் குறித்த அதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.