சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டு சம்பள அதிகரிப்பில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆண்டில் சம்பள அதிகரிப்பு, பண வீக்கத்திற்கு நிகரான அடிப்படையில் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான நிறுவனங்கள் பண வீக்கத்தை மையப்படுத்திய சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் சுமார் 4500 நிறுவனங்களிடம் இது தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் போது அநேகமான நிறுவனங்கள் 1.6 வீத சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூரிச்சில் அமைந்துள்ள பொருளாதார ஆய்வு நிலையத்தினால் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்கு சம்பள அதிகரிப்பானது பணவீக்கத்தை மையமாகக் கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
1.6 முதல் 1.8 வீதம் வரையிலான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தொழில் தருணர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பணவீக்கத்தின் அடிப்படையில் ஒப்பீடு செய்யும் போது பணியாளர்களுக்கு சிறிதளவு சம்பள அதிகரிப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் ஹோட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் சம்பள அதிகரிப்பு கூடுதலாக பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.