சுவிட்சர்லாந்தில் பூனைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து காலநிலை பாதுகாப்பு ஒன்றியத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆண்டு கால பகுதிக்குள் பூனைகள் மற்றும் நாய்களின் சனத்தொகை அதிகரிக்க கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருடம் ஒன்றில் பூனைகளினால் சுமார் 30 மில்லியன் பறவைகள் கொல்லப்படுவதாகவும் ஐந்து லட்சம் ஊர்வன கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இயற்கை சமநிலை பாதுகாப்பதில் பூனைகளின் அதிகரிப்பு தாக்கத்தை செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பூனைகளின் எண்ணிக்கையை வரையறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூனைகளின் சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.