இந்தியாவின் பிரபல நடிகர் ஷாருக் கானுக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகின் முதனிலை திரைப்பட விழாக்களில் ஒன்றான லோக்கார்னோ பிசா கிராண்ட் விருது வழங்கும் நிகழ்வில் இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக ஷாருக்கான் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகின்றார்.
திரைப்படங்கள் உணர்வுகளின் வெளிப்பாடாக அமைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விருது வழங்கப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 8000 ரசிகர்கள் குழுமியிருந்த அரங்கத்தில் ஷாருக் கானுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அனைவரும் அவரை கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலகம் முழுவதும் சுமார் மூன்று தசம் ஐந்து பில்லியன் ரசிகர்கள் ஷாருக்கானுக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான திரைப்படங்களில் ஷாருக் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.