பிரித்தானியாவின் லண்டனில் மற்றுமொரு கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 11 வயதான சிறுமி ஒருவரும், 34 வயதான பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
11 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 32 வயதான நபர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய லண்டன் சதுக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக கருதப்பட முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் ஏற்கனவே குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வலதுசாரி அமைப்புக்கள் இனக்குரோத நிறவெறி அடிப்படையிலான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
தாக்குதல் நடத்திய நபரை அருகாமையில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.