பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் இனவெறி வன்முறைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி ஒருவரின் பெற்றோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கடந்த மாதம் வடக்கு லண்டனில் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல்களின் எதிரொலியாக நாடு முழுவதிலும் இனவெறி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
தாக்குதலில் உயிரிழந்த எலிஸ் டா சில்வா என்ற ஒன்பது வயது சிறுமியின் பெற்றோர் வன்முறைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளைகளின் பெயரில் பிரித்தானிய வீதிகளில் இனினும் வன்முறைகள் மற்றும் கலகங்கள் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவற்றை உடன் நிறுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.
பிரித்தானிய வீதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் வெட்கப்பட வேண்டியர்கள் என சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.