உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்க், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ராம்பிற்கு ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார்.
மஸ்க்கின் எக்ஸ் எனப்படும் டுவிட்டர் தளத்தின் ஊடாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ட்ராம்ப் தொடர்பான போலிச் செய்திகள், பொய்பிரசாரங்களை தடுப்பதற்கு டுவிட்டரை பயன்படுத்த இலவசமாக சந்தர்ப்பம் வழங்குவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸிற்கான மக்கள் ஆதரவினை மலினப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹாரிஸிக்கான ஆதரவு வலுத்து வருவதாகவும் அதனை முறியடிப்பதற்கு எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டுமென மஸ்க் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ட்ராம்ப் மற்றும் மஸ்க் ஆகியோர் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.