இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏனையவர்களுக்கு இணைய வழியில் ஆன்லைன் வீசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக பயணிகள் அசைவுகள் எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒன் அரைவல் வீசா பெற்றுக் கொள்வதற்காக விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கடந்த 2ம் திகதி பிறப்பித்த உத்தரவிற்கு அமைய இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான வீசா வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து VFS குளோபல் நிறுவனத்தை நீக்கியது.
மேலும் பழைய முறையில் விமான நிலையத்தில் வீசா வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இதுவரையில் அரசாங்கம் ஆன்லைன் வீசா வழங்கும் பழைய முறையை நடைமுறைப்படுத்தவில்லை.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட இலங்கை வருகை தரும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்து ஒன் அரைவல் வீசா பெற்றுக் கொள்ள நேர்ந்துள்ளது.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இணைய வழியில் விசா வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து ஒன்றரைபல் வீசா பெற்றுக் கொள்ள நேரிட்டுள்ளது.
இந்த ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கை சுற்றுலா காலம் ஆரம்பித்துள்ள நிலையில் குறிப்பாக கண்டி அசல பெறஹராவை பார்வையிடுவதற்கு அதிகளவான வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை வருகை தருகின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் வீசா நடைமுறை காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும் ஆன்லைன் வீசா முறையின் மூலம் பயணிகள் இலகுவாக வீசா பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் வீசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு வீ.எப்.எஸ் குளோபல் என்னும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையினால் குறித்த நிறுவனம் பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை அறவீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையின் ஊடாக பாரிய ஊழல் மோசடி இடம்பெற்று இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் வீசா வழங்கும் நடைமுறைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியதனை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையிலேயே நீதிமன்றம் ஒன்லைன் வீசா வழங்குவதனை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு வருகை தந்து விமான நிலையத்தில் ஒன் அரைவில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.