சீரற்ற காலநிலையால் சூரிச் விமான நிலையத்தின் விமான பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடுமையான புயல் காற்று காரணமாக இவ்வாறு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 16 விமானங்கள் வேறும் விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளன.
சூரிச்சின் க்ளோட்டோன் பகுதியில் கடுமையான புயல் காற்று வீசி வருவதனால் சூரிச் விமான நிலையத்தில் விமானங்களை கையாள்வதற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவ்வாறு விமான ங்கள் வேறும் விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு விமானங்கள் திசை திருப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் விமான நிலைய பணியாளர்கள் திறந்தவெளியில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதேவேளை, இந்த புயல் காற்று வீசிய சந்தர்ப்பத்தில் சுமார் 70 ஆயிரம் இடி மின்னல் தாக்கங்கள் பதிவானதாக சுவிஸ் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.