சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 70 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புயல் மற்றும் மழை காரணமாக இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பிரின்ஸ் பகுதியில் இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் உடற்பயிற்சி நிலையமொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் காற்று காரணமாக மரணங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யூரி கான்டனில் மண்சரிவு ஏற்பட்டதாகவும் இதனால் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.