குரங்கம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் தற்பொழுது குரங்கம்மை நோய்த் தொற்று பரவி வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய்த் தொற்று உலக சுகாதார அவசர நிலைமையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோயின் clade Ib என்ற திரிபு மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொங்கோவில் இந்த புதிய திரிபு தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் 13 நாடுகளில் 17000 பேருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் காரணமாக இந்த ஆண்டில் இதுவரையில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.